சாய்னா நேவால் குறித்து அசிங்கமான விமர்சனம்: நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக காவல் ஆணையர் தகவல்..

Must read

சென்னை: பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அசிங்கமான கருத்துக்களை பதிவிட்ட, நடிகர் சித்தார்த்துக்கு சென்னை காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் பஞ்சாப் சுற்றுப்பயணம் சர்ச்சைக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டால் அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தார். சாய் நேவால் குறித்து சில ஆபாச வார்த்தைகளோடு பதிவிட்டு இருந்ததார். கடுமையான எதிர்ப்புகளை எழுப்பியது.  நடிகர் சித்தார்த்துக்கு பெண்கள் ஆணையம் உள்பட பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்ததுடன் பல மாநிலங்களிலும் வழக்குகள் பாய்ந்தன.

இதையடுத்து, பயந்துபோன சித்தார்த்,  தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக அவர் சாய்னாவுக்கு அனுப்பியிருந்த டிவிட்டில், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் நீங்கள்தான் உண்மையான சாம்பியன் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆபாச வார்த்தைகளால் விமர்சித்த நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. இதேபோல பெண் ஊடகவியலாளர் ஒருவரை விமர்சித்தது குறித்தும் மீண்டும் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் குறித்து விசாரணை நடத்த சென்னை காவல் துறைக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இதையடுத்து  சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய போலீசார் இதுகுறித்து விளக்கம் அளிக்க நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அளித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,  பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறு பரப்பும் வகையில் டிவிட்டரில் கருத்து தெரிவித்த வழக்கில் நடிகர் சித்தார்த்துக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர் எனவும், கொரோனா காலம் என்பதால் எந்த முறையில் விசாரணை நடத்தலாம் என ஆலோசனை நடத்திவருவதாக தெரிவித்துள்ளார்.

More articles

Latest article