சென்னை: சென்னையில் பல எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. சுமார் 48 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கடந்த சில தினங்களாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் இயந்திரங்களில் மர்ம நபர்கள் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. கடந்தவாரம், வேளச்சேரி, பெரம்பூர், வடபழனி, தரமணி, விருகம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நூதனமான முறையில் ரூ.20 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று சென்னை பெரியமேடு – வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள ஸ்பேட் வங்கி ஏடிஎம்ல் 190 முறை ஏடிஎம். கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் பணம் கொள்ளை அடித்திருப்பது தெரியவந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பெரியமேடு பகுதியில், இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரியமேடு எஸ்பிஐ வங்கிக்கிளை மேலாளர் நேற்று மாலை ஏடிஎம்-க்கு சென்று சோதனை செய்தபோது பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பெரியமேடு -வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள SBI ATM-யில் கடந்த 15, 16 மற்றும் 17-தேதிகளில் ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி 190 முறை ரூபாய் 16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று ஏடிஎம் கொள்ளை தொடர்பாக அளித்த பேட்டியில், “தமிழகம் முழுவதும் கடந்த 17, 18 மற்றும் 19 தேதிகளில் SBI வங்கி ஏடிஎம்களில் மட்டும் இதுவரை ரூபாய் 48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஏடிஎம்மில் கொள்ளையடிக்க எந்த கார்டு உபயோகிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். அதில் சென்னையில் மட்டும் 7 புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது 8-வது புகாராகச் சென்னை பெரியமேடு – வேப்பேரி நெடுஞ்சாலையில் ஏடிஎம் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்கது.
இந்த கொள்ளை சம்பவத்தை ஈடுபட்டிருப்பது டெல்லி,ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழக காவல் துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விசாரணைக்காகச் சென்றுள்ளனர்.
இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்த, எஸ்.பி.ஐ பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.
[youtube-feed feed=1]