சிவகங்கை: விசாரணைக்குஅழைத்து செல்லப்பட்ட இளைஞர், மரணமான வழக்கில், அவரது இறுதி வாக்குமூலம் வெளியாகி உள்ளது. அவரது காலில் ஈர சாக்கை போட்டு போர்த்தி இரும்பு கம்பி மூலம் காலில் கடமையாக தாக்கினர் என தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த வழக்கில் தாக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக ரிமாண்ட் அறிக்கையில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதில், தன்னையும் தனது நண்பர் குணாவையும் சீருடை இல்லாத 10 காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றதாகவும், வெள்ளை துணியால் கண்களை கட்டி தனது நண்பர் குணாவை ஒரு காரிலும், தன்னை மற்றொரு காரிலும் ஏற்றிச் சென்றதாகவும் கூறியுள்ளார். பின்னர், சிவகங்கை செல்லும் சாலையில் ஒரு இடத்தில் தன்னை இறக்கி தரையில் அமர வைத்ததாகவும், தனது காலுக்கு கீழ் 2 கற்களை வைத்த காவல்துறையினர், ஈரசாக்கை போட்டு போர்த்தி இரும்பு கம்பியை கொண்டு காலில் பலமாக அடித்ததாகவும் கூறியுள்ளார்.
கால் எலும்பு முறிந்து ரத்தம் வெளியேறிதாகவும், கண்ணை கட்டி இருந்ததால், யார் அடித்தார்கள் என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவரிடம் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விட்டதாக சொல்லுமாறு காவல்துறையினர் மிரட்டியதாகவும் ஆகாஷ் கூறியுள்ளார்.
நீதிபதியிடம் அவர் அளித்த வாக்குமூலத்தின்போத, ஆகாஷின் வலது காலில் தொடை முதல் பாதம் வரை பெரிய அளவில் மாவுக்கட்டு (POP Bandage) போடப்பட்டிருந்ததாகவும், அவர் அளித்த வாக்குமூலத்தில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயம் என்று சொல்லச் சொல்லி போலீசார் மிரட்டியதாக நீதிபதியிடம் ஆகாஷ் தெரிவித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.