சென்னை:

மிழகத்தில்  தற்போது நடக்கும் ஆட்சிக்கும், அதிமுக அம்மா கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் மதுரையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய டிடிவி தினகரன் தமிழக அரசு குறித்தும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் டிடிவியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தற்போது நடக்கும் ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றார்.

சிலர் தலைமை கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு அது உண்மை சொல்லி வருவது அனைவருக்கும் தெரியும். குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள தைரியமில்லாமலும், கட்சியை கொள்ளைபுறமாக கைப்பற்றிவிட வேண்டும் என சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்.

இதைவிட்டுவிட்டு சரியான வழியில் அவர்கள் வர வேண்டும். இல்லையென்றால் திருத்தப்படுவார்கள் என நான் கூறினேன்.

குற்றச்சாட்டுகளை எண்ணி பார்த்து அமைச்சர்கள் தஙகளை சரி செய்து கொள்ள வேண்டும். தவறான வழியை விட்டுவிட்டு அமைச்சர்கள் சரியான வழிக்கு வரவேண்டும்.

ஜெயலலிதா வழியில் செல்லவில்லையென்றால் அவர்களுக்கு ஆபத்து. யார் திருடன் என்பது மக்களுக்கும் தொண்டருக்கும் தெரியும்.

கட்சி இருந்தால் தான் ஆட்சி இருக்கும். ஆட்சி கண்ணாடி போன்றது. ஆட்சியை கவனமாக வைத்திருக்க வேண்டும். சிதறினால் நாங்கள் பொறுப்பு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.