வாடகை பாக்கி: ரஜினியின் ‘ஆஸ்ரம்’ பள்ளிக்கு பூட்டு? பரபரப்பு

சென்னை,

டிகர் ரஜினிகாந்த் மனைவி நடத்தி வரும் ஆஸ்ரம் பள்ளிக்கு, இடத்தின் உரிமையாளர் அதிரடி யாக பூட்டுபோட்டுள்ளார்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

கிண்டி ரேஸ் கோர்சில் உள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஷ்ரமம் பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிட வாடகை பாக்கி பல ஆண்டுகளாக ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வாடகை பாக்கி பல கோடி ரூபாயை எட்டியுள்ள நிலையில், கட்டிட உரிமை யாளர் பள்ளியை காலி செய்ய வலியுறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, இன்று காலை பள்ளிக்கு வந்த கட்டி உரிமையாளர், வாடகை பாக்கி காரணமாக, கட்டித்தை காலி செய்ய சொல்லி அங்கு படிக்கும் மாணவர்களை வெளியேற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளியில் இருந்து  வெளியேற்றப்பட்ட மாணவர்கள் வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல், இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Rental problem: Rajinikanth's 'Ashram' to lock in school! Furore