சென்னை:

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக எம்பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ராஜ்யசபா எம்பிக்கள் மைத்ரேயன், லட்சுமணன், லோக்சபா எம்பி.க்கள் 8 பேர் பன்னீர்செல்வதுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் 10 பேர் இது வரை ஆதரவு தெரிவித்தனர். தற்போது மேலும் ஒரு எம்பி ஆதரவு தெரிவித்துள்ளார்.

தேனி எம்.பி. பார்த்திபன் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவரோடு சேர்ந்து இதுவரை மொத்தம் 11 எம்.பி. க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.