சென்னை:

சென்னையில் அவரது வீட்டில் இன்று பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அப்பேபது அவர் கூறுகையில்,‘‘ஜெயலலிதா மருத்துவனையில் இருந்த போது சசிகலா எவ்வித விளக்கமும் அளிக்க வில்லை. அதிமுக.வை 28 ஆண்டுகளாக நாட்டிலேயே 3-வது பெரிய கட்சியாக வளர்த்தவர் ஜெயலலிதா.

கவர்னரை மைத்ரேயன் மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தார். அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின் நிலையை ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. என்னை முதலமைச்சர் பதவியில் உட்காரவைத்து சித்ரவதை செய்தார்கள் . 16 ஆண்டுகளாக எனக்கு தொல்லை கொடுத்து வந்தனர்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘கடந்த 20 ஆண்டுகளில் ஜெயலலிதா ஒரு முறை கூட என்னை கடுமையாக பேசியது கிடையாது. யாரை பற்றியும் நான் ஜெயலலிதாவிடம் குறை கூறியதும் கிடையாது. ஜெயலலிதாவுக்கு என்னை பிடித்து போனதால் இவர்கள் எனக்கு தொல்லை கொடுத்தார்கள்.

தனியாளாக நின்று போராடுவேன் என்று கூறியதை பெருமையோடு பலர் தெரிவித்தனர். ஜெயலலிதா மறைந்த போது அவரது உடலை கூட பார்க்க தீபாவை அனுமதிக்கவில்லை. யாராவது தன்னைத் தானே சிங்கம் என்று சொல்லிக் கொள்வார்களா?. நாளை தலைமைச் செயலகம் செல்கிறேன்’’ என்றார்.