டில்லி துணை முதல்வர் அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் திருட்டு!

Must read

 

டில்லி,
ந்தியாவின் தலைநகர் டில்லியில் உள்ள துணைமுதல்வர் அலுவலகத்தில் திருட்டு நடை பெற்றுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் டில்லியில் உள்ள மாநில அரசின் தலைமைசெயலகத்தில் உள்ள துணை முதல்வர் அறையில்  திருட்டு நடைபெற்றுள்ளது.
டில்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். துணை முதல்வராக பதவி வகிப்பர் மணிஷ் சிசோடியா.  தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் ஆவணங்கள் திருடு போயுள்ளது.
இன்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள், துணைமுதல்வர் அறை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசுக்கும், துணைமுதல்வருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
துணைமுதல்வர் அலுவலகத்தில் இருந்து  இரண்டு கம்ப்யூட்டர்கள், அரசு லெட்டர் பேடுகள் மற்றும்  பல முக்கிய ஆவணங்களை திருடர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகத்திலேயே  ஆவணங்கள் திருடு போன சம்பவம் ஆம்ஆத்மி கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article