கொல்கத்தா: வங்கதேச அகதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில்,  இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக 27 கிமீ நிலம் ஒதுக்கி மாநில பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.  இதற்கான உத்தரவை எல்லை பாதுகாப்பு படை அதிகாரியிடம் நேரடியாக வழங்கினார்.

கடந்த  மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, எல்லையில் வேலை அமைக்க மத்தியஅரசு மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்  நிலம் ஒதுக்காமல்  சண்டித்தனம் செய்து வந்த நிலையில், பாஜக ஆட்சி அமைந்த நிலையில்,  “மேற்கு வங்கத்தில் இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 27 கி.மீ. நிலப்பரப்பை எல்லை பாதுகாப்புப் படைக்கு முதல்வா் சுவேந்து அதிகாரி ஒதுக்கினாா். அத்துடன், சட்டவிரோத ஊடுருவல்காரா்கள் இனி நேரடியாக எல்லை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவா் என்ற அதிரடி அறிவிப்பையும் அவா் வெளியிட்டாா்..

மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் இரண்டு கட்டங்களாக நடைற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்  பாஜக அமேக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.  திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா, தேர்தலில் தோல்வி அடைநதார்.

இதைத்தொடர்ந்து, மாநில பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து, சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன..இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 25 கி.மீ. நிலப்பரப்பை எல்லை பாதுகாப்புப் படைக்கு முதல்வா் சுவேந்து அதிகாரி  ஒதுக்கினாா்..

பின்னர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வா் சுவேந்து அதிகாரி, ‘மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் இடம்பெறாத சமூகத்தினா் அடையாளம் காணப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவா். சட்டவிரோத ஊடுருவல்காரா்களை நேரடியாக எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கும்படி, முந்தைய திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அவா்கள் அதை கடைப்பிடிக்கவில்லை.

இனி வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவும் நபா்கள் நேரடியாக எல்லை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவா். மத்திய அரசு-பாதுகாப்புப் படையினருடன் ஒருங்கிணைந்து, மேற்கு வங்கத்தைப் பாதுகாப்போம்’ என்றாா்.

[youtube-feed feed=1]