தேவர்மகன், சின்னவுண்டரை சொல்லாதவர்கள், “கபாலி”க்கு மட்டும் சாதி முத்திரை குத்துவது ஏன்?    இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி

Must read

“கபாலி..  தலித் சினிமாவா?” என்ற தலைப்பில் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் ஆசிரியர் குணசேகரனின் கேள்விகளுக்கு   கபாலி பட இயக்குநர்   ரஞ்சித்  பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
“சினிமாக்களில், கபாலி என்ற பெயர் வில்லன்களுக்கு மட்டுமே இருந்தது. அதை ஒரு ஹீரோவிற்கு வைத்தேன். இன்றைக்கு கபாலி என்ற பெயர் வைத்தவர்கள் எல்லாம் பெருமையுடன் தங்களின் பெயரை கூறுகின்றனர்! கபாலி என்பது புத்தரின் பெயர்களுள் ஒன்று. சென்னை கபாலீஸ்வரர் கோயில்கூட முன்பு புத்தவிஹாராக இருந்தது என படித்திருக்கிறேன்.
கபாலி, தலித்துகளுக்கான படம் அல்ல. ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டவர்களின் குரல்.  ஆணாதிக்கத்தால் பாதிக்கப்படும் பெண்கள்.  பெரும்பான்மையினரால் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர்.. இப்படி எல்லா தரப்பிலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்.
ஒடுக்குபவர்கள் – ஒடுக்கப்பட்டவர்கள்.. இருவர் அமர்ந்து  உரையாட வேண்டும்.   இது எல்லாத் தரப்பிலும் நடக்க வேண்டும். அதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். ஒருவன் சொல்ல, இன்னொருவன் கேட்பது என்பது கூடாது.  இருவருக்குமிடையே உரையாடல் நடைபெற வேண்டும்.
தமிழ் நாட்டில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறை பற்றி பேசும் கபாலி படத்துக்கு மலேசியாவை கதைக்களமாக தேர்ந்தெடுத்தது ஏன் என்று கேட்கிறார்கள்.  தமிழர்கள் எங்கே போனாலும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். மலேசியாவில் ஜாதி சங்கங்கள் அதிகம் இருக்கின்றன.
aa
தமிழர்கள் எங்கே போனாலும் ஜாதிய எடுத்துக்கொண்டே செல்கிறார்கள். அங்கும் ஒடுக்குமுறை தொடர்கிறது.  .
மலேசியா தமிழர்களுடைய வாழ்க்கையை முடிந்தவரை எதார்த்தத்தமாக எடுத்திருக்கிறேன்.    ஆனால்  முழுமையான எதார்த்த படம் இல்லை. மெட்ராஸ் எடுத்தபோது, இது என் பகுதி,  நான் வாழ்ந்த, வாழும் பகுதி கதைக்களமாக இருந்தது. அந்த அளவுக்கு மலேசியாவை நான் கொண்டு வர முடியாது.
நான் கோட் சூட் போடுவேண்டா… நான் கால் மேல் கால் போட்டு அமருவேன்… நான் ஆளப்பிறந்தவன்டா போன்ற வசனங்கள் வைக்கப்பட்டதற்கு காரணம்…   ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வரும் ஒருவர் அணியும் உடை, பேசும் வசனம் அவசியமான இருந்தது.
கபாலி தலித் படமா என்ற கேள்விக்கு சட்டென்று பதில் வருகிறது ரஞ்சித்திடமிருந்து. முதலில் இது தலித் படமல்ல. இது ஒரு படம். தேவர் மகன், சின்னக்கவுண்டர் படங்கள் வரும் போது இது மாதிரியான கேள்விகள் எழவில்லை. இப்போது ஏன் தலித் படம் என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.
கபாலி பார்த்து விட்டு நிறைய திட்டுகிறார்கள். கபாலியைப் பற்றிய விமர்சனங்கள் கூர்மையாக இருக்கிறது ரஜினி படத்தை ரஞ்சித் இயக்கக் கூடாது என்று முன்னணி பத்திரிக்கையும் கூறியுள்ளதே என்ற கேள்விக்கு, “எனக்கு இது முன்பே தெரியும். மெட்ராஸ் பார்த்து விட்டுதான் ரஜினி கூப்பிட்டார். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார் என்றார் ரஞ்சித். படம் பற்றி விமர்சனம் செய்யுங்கள். என்னை சாதி ரீதியாக விமர்சனம் செய்வது ஏன்? இதை நான் அரசியல் செய்யவில்லை” என்றார் ரஞ்சித்.

More articles

Latest article