பாலி..  தலித் சினிமாவா?” என்ற தலைப்பில் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் ஆசிரியர் குணசேகரனின் கேள்விகளுக்கு   கபாலி பட இயக்குநர்   ரஞ்சித்  பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
ரஜினி அரசியல் வசனங்களை கவனமாக புறக்கணித்து வந்தார். பாட்சா, அருணாசலம் படத்திற்குப் பிறகு அரசியல் பஞ்ச் வசனங்கள் அதிகம் இல்லை. ஆனால் கபாலி படத்தில் பஞ்ச் டயலாக்கே அரசியல்தான் எப்படி கன்வின்ஸ் செய்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ரஞ்சித், இந்த கதைக்கு அரசியல் பஞ்ச் வசனங்களை தேவை. அவரை கூல் ஆக ஒத்துக்கொண்டு பேசி ஒத்துழைப்பு கொடுத்தார் ரஜினி.. அவர் பேசிய வசனங்கள் எல்லாம்  அவர் முழு மனதுடன் ஏற்று பேசியதுதான் என்றார்.
படத்தின் கிளைமேக்ஸை இப்படி வைக்கச் சொன்னதே ரஜினிதான். அமெரிக்காவில் இருந்து பேசி என்னை கன்வின்ஸ் செய்தார். என்னை சுதந்திரமாக  செயல்பட அனுமதித்தார்.   படத்தைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் சுயஜாதி பெருமையை பேசவில்லை. ஒட்டுமொத்த மானுட பிரச்சினையை பேசுவதுதான். என்னை ஆள்பவனிடம் இருந்துதான் விடுதலை கேட்கிறேன்.
 இனி தலித் சமூகத்தில் அம்பேத்கர் பிறக்க வேண்டியதில்லை. அம்பேத்கர் உயர் சமூகத்தில் பிறக்க வேண்டும்
z
படத்தில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகம் இருப்பதாக விமர்சனம் வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த ரஞ்சித் வன்முறை அதிகம் என்பதை ஒத்துக் கொள்கிறேன். இது எதார்த்தத்திற்கு மீறியதுதான். கதையின் சுவாரஸ்யத்திற்கான வைத்தேன் என்றார்.
கபாலி போல தொடர்ந்து படம் எடுப்பேன். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைச் சொல்லும் படங்களைத் தொடர்ந்து எடுப்பேன். மக்களின் பிரச்சினைகளைச் சொல்ல வேண்டும். எனவே தொடர்ந்து செயல்படுவேன்.
தலித்துகளின் பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ரோஹித் வெமுலா ஏன் சாக வேண்டும். குஜராத்தில் மாட்டுத் தோல் வைத்திருந்த தலித்துகளை தாக்கியிருக்கிறார்கள்.  இது எல்லாமே  வன்முறையின் உச்சம். எனக்கு எந்த பாரம்பரியமும் கிடையாது. கலாச்சாரமும் கிடையாது, பாரம்பரிய பின்னணியும் கிடையாது. இதுதான் நான்… இப்படித்தான் என் படங்கள் இருக்கும்” இவ்வாறு ரஞ்சித் பேட்டியளித்தார்.