ஜெனிவா: சீனாவின் சினோவாக் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில், சில தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதால், உலக மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரை 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு   உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

பைசர் – அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அஸ்ட்ராஜெனகா (கோவிஷீல்ட்) – உலக அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி இது. பிரிட்டன், மலேசியா, தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜான்சன் & ஜான்சன் – சிங்கிள் டோஸ் தடுப்பூசியான இது அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாடர்னா – கனாடா, டென்மார்க், பின்லாந்து, ஜப்பான், போர்ச்சுக்கல், தைவான் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

சினோபார்ம் – சீனா, பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஸ்புட்னிக்-–வி, கோவாக்சின், சினோவேக் போன்ற தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது.