சென்னை:
வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்தது ஒன்றியக் குழு சென்னை வந்தடைந்தது.
வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்தியக் குழு தமிழகம் வர உள்ளதாகப் பேரிடர் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஒன்றிய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான எழு பேர் கொண்ட குழுவினர் இன்று சென்னை வந்தடைந்தனர். இந்த அதிகாரிகள் இரண்டு குழுவாக பிரிந்து தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
இவர்கள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு குழு ஆய்வு செய்யும் எனவும், கன்னியாகுமரிக்குச் சென்று மற்றொரு குழு ஆய்வு செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 23ஆம் தேதி, மயிலாடுதுறை திருவாரூர் , தஞ்சாவூர் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு ஒரு குழுவும், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களுக்கு மற்றொரு குழுவும் சென்று ஆய்வு செய்யவுள்ளதாகத் தெரிவித்த அவர், வரும் 24ஆம் தேதி ஆய்வு செய்து.
முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து மத்திய அரசின் மழை பாதிப்பு தொடர்பான ஆய்வறிக்கையை அளிக்கும்.