சென்னை: 
வர்கள் எந்த இந்திய மொழிகளை வளர்ப்பார்கள்?  என்று  தமிழ்நாடு மாநில சிறுபான்மை நலவாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 இல் திட்டமிடப்பட்டுள்ளபடி இந்திய மொழிகளின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான வழிகளை ஆராய்ந்து பரிந்துரைக்க ஒரு ‘உயர் அதிகாரம் கொண்ட’ குழுவை மத்திய அரசு  அமைத்துள்ளது.
சமஸ்கிருத மொழிக்குப் புத்துயிர் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஆர்எஸ்எஸ்-இணைந்த என்ஜிஓ சமஸ்கிருத பாரதியின் நிறுவன உறுப்பினரும் கல்வியாளருமான சாமு கிருஷ்ண சாஸ்திரி குழுவின் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். சாஸ்திரி இதற்கு முன்பு கல்வி அமைச்சகத்தின் ஆலோசகராக பணியாற்றியவர்.
இந்த நியமனம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்   தமிழ்நாடு மாநில சிறுபான்மை நலவாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு நியமித்துள்ள குழுவுக்குத் தலைவர் சானு கிருஷ்ணசாஸ்திரி RSS பிரமுகர். இவர் சமஸ்கிருதத்தைப் பேச்சுமொழியாக்கச் செயலாற்றும்” சமஸ்கிருத பாரதியின்”நிறுவனத் தலைவர்.செயலர் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்.இவர்கள் எந்த இந்திய மொழிகளை வளர்ப்பார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.