சென்னை:

டிடிவி தினகரனின் வலதுகரமான தங்கத்தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன் குறித்து மட்டரகமாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  டிடிவி தினகரன் குறித்து நான் விமர்சனம் செய்தது உண்மைதான். முடிந்தால் என்னை கட்சியை விட்டு நீக்கி கொள்ளுங்கள் என  ஆவேசமாக கூறியுள்ளார். இது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மக்களிடையே சசிகலா குடும்பத்தினர் மீது நல்லெண்ணம் கிடையாது. சசிகலா குடும்பத்தி னரை  மன்னார் குடியா மாபியா கும்பல் என்றும், ஜெயலலிதா மரணத்துக்கு அவர்கள் குடும்பத்தினர்தான் காரணமா என்று இன்றும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினர் ஓரங்கட்டப்பட்டதை தொடர்ந்து, அதிமுகவையும் கைப்பற்றி விடலாம் என்று கனவுடன் அரசியலுக்கு வந்த டிடிவி தினகரன் சில அதிமுக அதிருப்தியாளர்களை கைக்குள் வைத்துக்கொண்டு ஆட்டத்தை தொடங்கினார். பணத்தை அள்ளி வீசி  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றியும் பெற்றார். அவருக்கு ஆதரவாக அதிமுக வில் இருந்து பிரிந்து வந்த தங்கத்தமிழ் செல்வன் உள்பட 18 எம்எல்ஏக்கள்  தகுதி இழந்து தெருவுக்கு வந்துவிட்ட நிலையில், நடைபெற்று முடிந்த லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் டிடிவி தினகரன் கட்சி அடியோடு தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டது.

இதன் காரணமாக டிடிவி தினகரன் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. பல நிர்வாகிகள் மீண்டும் தாய்க்கழகமான அதிமுகவுக்கே திரும்பினர். இந்த நிலையில் டிடிவி தினகரன் நடவடிக்கை மீது அதிருப்தியில் இருந்த தங்கத்தமிழ் செல்வனும் அங்கிருந்து விலகுவதாக செய்திகள் பரவின. அதற்கு தகுந்தார்போல, சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தங்கத்தமிழ்செல்வன் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், டிடிவி தினகரன் குறித்து தங்கத்தமிழ் செல்வன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதில், டிடிவி தினகரனை தங்கத்தமிழ் செல்வன் கடுமையாக சாடியிருந்தார்.

இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இந்த ஆடியோ குறித்து விளக்கம் அளித்த தங்க தமிழ்ச்செல்வன், ‘கட்சியின் நிர்வாகம் பிடிக்காததால், கட்சியில் ஒருசில நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்ததால் நான் தலைமையை விமர்சனம் செய்து பேசினேன். நான் பேசியது உண்மைதான். நான் பேசியது தவறு என்றால் என்னை கட்சியில் இருந்து நீக்கியிருக்க லாம். ஆனால் அதைவிடுத்து என்னை பற்றி இல்லாததும், பொல்லாததையும் சமூக வலைத்தளங் களில் பரப்பி வருவது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்கத்தமிழ்செல்வன் பேசும் ஆடியோ…