பாரதீய ஜனதா மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எப்போதுமே கடுமையாக விமர்சிக்கும், தமிழ்நாட்டின் ஒரு மூத்த அரசியல் விமர்சகர், சில நாட்களுக்கு முன்னர், மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பற்றி குறிப்பிட்டபோது மிகவும் விரக்தியாக பேசியதன் தொகுப்பு;

“இவர்களுக்கு(மோடியின் குழுவினர்) ஆட்சி செய்வது பற்றியோ, நல்ல நிர்வாகத்தை வழங்குவது பற்றியோ, மக்களின் நல்வாழ்வை உறுதிசெய்வது பற்றியோ, குறைந்தபட்ச அக்கறைகூட கிடையாது. அதற்கான திறமையும் பெற்றவர்கள் இல்லை இவர்கள்.

இவர்களின் நோக்கமெல்லாம், இந்த நாட்டை பெருமுதலாளிகளிடம் ஒப்படைத்து விடுவது மற்றும் நாட்டின் மாநில உரிமைகள், சமூக நீதி, மொழிவாரி அந்தஸ்து உள்ளிட்ட அனைத்து அடிப்படை அம்சங்களையும் ஒழித்துவிட்டு, ஒட்டுமொத்த நாட்டையும், சிலபல நிர்வாகப் பகுதிகளாகப் பிரித்து, அவற்றை, ஒரே மைய அரசின்கீழ் நேரடியாகக் கொண்டுவந்து, ஒரு இந்துத்துவ சர்வாதிகார, மனிதத்தன்மையற்ற ஆட்சியை அமைப்பது. இதுதான் அவர்களின் நோக்கம். அதை நோக்கித்தான் அவர்கள் வேகமாக போய்க்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

அந்த மூத்த அரசியல் விமர்சகர் சொன்னதில், கடந்த7 ஆண்டுகளின் மோடி ஆட்சியை அலசிப்பார்க்கும்போது, எந்த தவறையும் நம்மால் கண்டுபிடிக்க முடியாதுதான்!