மனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வை அறிவித்த தமிழர் யார் தெரியுமா?

Must read

சென்னை

டந்த 1969 ஆம் ஆண்டு மனிதன் முதல் முதலாக நிலவில் இறங்கியதை அறிவித்த தமிழர் பற்றிய செய்தி இதோ,

கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி நிலவில் முதல் முதலாக மனிதன் தந்து காலடியைப் பதித்தான். இந்த செய்தி உலகெங்கும் லைவ் ஆக ஒளிபரப்பப்பட்டது. ஆனால் அப்போது சென்னை நகரில் தொலைக்காட்சி வசதி கிடையாது. எனவே வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்னும் வானொலி மூலம்  ஒலிபரப்ப அமெரிக்க தூதரகம் திட்டமிட்டது. இதற்காக அமெரிக்க தூதரகத்தில் ஒரு தொலைக்காட்சி அமைக்கப்பட்டது.

சென்னைக்குத் தொலைக்காட்சி முதல் முதலாக வந்ததே அப்போது தான் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சியில் நடைபெறுவதைப் பார்த்து அப்படியே அமெரிக்க வானொலியில் வர்ணனை செய்ய நல்லதம்பி என்பவர் நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 33 வயதாகும். அப்போது அதிகம் அறியப்படாதவராக இருந்த நல்லதம்பி பணி ஓய்வு பெறும் போது தூர்தர்ஷன் இயக்குநராக ஓய்வு பெற்றார்.

இந்த அனுபவம் குறித்து நல்லதம்பி, “வாஷிங்டனில் அப்போதைய நேரம் அதிகாலை 2.56 ஆகும். சென்னையில் மதியம் 12.24 ஆனபோது  நீல் ஆம்ஸ்டிராங் தனது விண்கோளில் இருந்து வெளியேறி கழுகு நிலம் இறங்கியது என அறிவித்தார். அதை நான் நேரடி ஒளிபரப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏராளமான தூசுக்களுக்கி இடையில் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி பதித்து 19 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் இறங்கினார்.

ஆம்ஸ்ட்ராங் அப்போதைய அமெரிக்க அதிபரான ரிச்சர்ட் சிக்ழனுடன் பேசினார். நான் இவற்றைக் கவனித்து அமெரிக்க வானொலி மூலம்  வர்ணனையாக செய்தியைத் தெரிவித்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க மக்கள் மனிதன் நிலவில் இறங்கியதைக் கட்டுக்கதை என இன்னமும் கூறுகின்றனர். ஆனால் அந்த நிகழ்வு என்னைப் பொறுத்தவரை ஒரு சாதனை ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

நல்லதம்பி இவ்வாறு நேரடி வர்ணனை செய்வது அதன் பிறகும் தொடர்ந்தது. அப்போதைய முதல்வர் அண்ணாதுரை மரணமடைந்த போதும் இவர் நேரடி வர்ணனை செய்துள்ளார். உலகமே நிலவில் மனிதன் இறங்கியதன் 50 ஆம் ஆண்டை கொண்டாடி வரும் வேளையில் அதே தினத்தன்று அமெரிக்காவின் கென்னடி  விண்வெளி நிலையத்துக்கு தனது பேரக்குழந்தைகளுடன் நல்லதம்பி சென்றுள்ளார்.

More articles

Latest article