ப்பிளின் புதிய வரவான,  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 7 மற்றும் 7+ ஆகிய மொபைல்கள் இந்தியாவில் அக்டோபர் 7-ஆம்தேதி  அறிமுகப்படுத்தபடவிருக்கிறது.
ஆப்பிளின்  ஐபோன்-7 மற்றும் 7+ போன்கள் அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி அறிமுகம்  செய்யப்பட்டது. முதல் கட்டமாக செப்.9-இல் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கென விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் இன்னும் மொபைல் ஷோரூம்களில் வியாபாரத்துக்கு வரவில்லை. செப்.16-ஆம் தேதியிலிருந்து ஐபோன் 7 மற்றும் 7+அமெரிக்காவின் மொபைல் ஷோரூம்களை அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
21iphone-7-lineup-mock
இந்தியாவில் இந்த புதியவகை போன்கள் அக்டோபர் 7-ஆம்தேதி அறிமுகம் செய்யப்படவிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் விலை தொடர்பான தெளிவான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. குறைந்தபட்ச விலையாக ஐபோன் 7,  32ஜிபி மாடல் ரூ.60,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஐபோன் 7 மற்றும் 7+ ஆகியவை  32ஜிபி, 128ஜிபி மற்று 256ஜிபி என்ற மூன்று விதங்களில், சில்வர், கருப்பு, ரோஸ் கோல்ட் மற்றும் தங்க வண்ணங்களில்,வெளிவரவிருக்கின்றன.