சென்னை:

ன்று நடைபெறும்  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில்   பாம்புகள் விடப்படலாம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு சென்னையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

இந்த நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னஐ – கொல்கத்தா இடையே ஐ.பி.எல். போட்டி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “இன்று சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் மைதானத்தில்   பாம்புகள் விடப்படலாம். அந்த பாம்புகளை பிடித்து விளையாட்டு வீரர்களும், காவல்துறையும் ஐபிஎல் விளையாடப் போகிறார்கள். நாங்கள் வேடிக்கை பார்க்கப்போகிறோம். நூற்றுக் கணக்கான பாம்புகளை விடப்போவதாக சிலர் சொல்லிக்  கொண்டிருக்கிறார்கள்.

பாம்பு உள்ளே வரக்கூடாது என்று தடையிருக்கிறதா” என்று தெரிவித்துள்ளார் வேல்முருகன்.

இதனால் பீதி ஏற்பட்டுள்ளது.