சென்னை:

ன்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐபிஎல் போட்டி தள்ளி வைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் போர்குரல் எழுப்பி வரும் நிலையில், கிரிக்கெட் போட்டியை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்சினை காரணமாக தமிழகம் கொந்தளிப்பான நிலையில் இருக்கும்போது, ஐபிஎல் போட்டி தேவையா என அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக இன்று வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், இவ்வளவு கட்டுப்பாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டியை காண வேண்டுமா என இளைஞர்கள் யோசித்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.

மேலும்,  காவிரி வழக்கில் தமிழக அரசு உரிய வாதங்களை முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஆதார மற்றது என்றும்,  ஜெயலலிதா வழியில் அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.

மேலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பச்சை கொடி காட்டுவோம் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,

இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயிகளைச் சார்ந்துள்ள நாடு என்பதால் குறிப்பாக தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரை பெற்றுத்தருவோருக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையளவுக்கு மத்திய அரசு செயல்படுத்தி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பச்சைக்கொடி காடுடுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறார்.

அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கு? என்று ஜெயக்குமார், செய்தியாளர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கும் இதற்கும் எப்படி சம்பந்தப்படுத்துகிறீர்கள்?

பச்சைக் கொடி என்பது தேசிய கொடியில் உள்ளது.  மேலும் விவசாயத்தை குறிக்கும் வகையிலேயே தேசியக்கொடியில் பச்சை நிறம் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

அதிமுக கொடியில் கருப்பு இருக்கு… அதனால் கருப்பு கொடி காட்டுறதுலேயும் தவறு இல்லை என்கிறீர்களா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.

கருப்பு கொடி காட்டுவது என்பது எதிர்கட்சியின் பாங்கு என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஐபிஎல் போட்டியை நிறுத்த கோரி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசியதாகவும் ஆனால், அட்டவணை வெளியிட்டுள்ளதால் போட்டியை நிறுத்த முடியாது என அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும்,  ஐ.பி.எல் போட்டியை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.