சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் நிலையில் இன்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

ஆனால், தமிழர்களின் எதிர்ப்பை மீறி ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடந்தே தீரும்,  என ஐசிசிஐ நிர்வாகம் அறிவித்து போட்டியை வரலாறு காணாத அளவிலான பாதுகாப்புடன் இன்று இரவு நடத்துகிறது.

இன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.

சூதாட்டப் புகார் காரணமாக இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பிறகு, இந்த ஆண்டு சிஎஸ்கே அணி மீண்டும் விளையாடுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு,  தோனி தலைமையேற்கிறார். அதுபோல சென்னையைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இன்றைய போட்டி காவிரி பிரச்சினை காரணமாக தமிழர்களிடையே எதிர்பார்ப்பின்றி நடைபெற உள்ளது.

இன்றைய போட்டியில் சிஎஸ்கே சார்பில் களமிறங்க உள்ள வீரர்கள் விவரம்:

 

தோனி (கேப்டன்), கேஎம்.ஆசிப், சாம் பில்லிங்ஸ், சைதன்யா பிஷ்னாய், டிவைன் பிராவோ, தீபக் சச்சார், டுபிளெசிஸ், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர், ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், நாராயண் ஜகதீசன்,

ஷிட்ஸ் சர்மா, மோனு குமார், நிகிடி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, மிச்செல் சான்டர், கனிஷ்க் சேத், கர்ன் சர்மா, துருவ் ஷோரே, சர்துல் தாகுர், முரளி விஜய், ஷேன் வாட்சன், மார்க் உட்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விவரம்:

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), பியுஷ் சாவ்லா, டாம் கர்ரன், கேமரான் டெல்போர்ட், இஷாங் ஜக்கி, மிச்செல் ஜான்சன், குல்தீப் யாதவ், கிறிஸ் லின், கமலேஷ், சுனில் நரேன், நிதிஷ் ரானா,

ஆன்ட்ரெ ரஸ்ஸல், ஜவோன் சியர்லஸ், சிவம் மவி, சுப்மன் கில், ரிங்கு சிங், ராபின் உத்தப்பா, வினய்குமார், அப்பர்வ் வாங்கடே.