ஸ்ரீவில்லிப்புத்தூர்:

சிரியர் தாமதமாக வந்ததால்,  பள்ளிக்கு மாணவர்கள் பூட்டு போட்ட சம்பவம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சின்ன அத்திக்குளம் என்ற சிற்றூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இது 50 வருட பழமை வாய்ந்த பள்ளியாகும். ஆனால் இப்பள்ளியில் 21 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

(அரசின் நியமனப்படி 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற இலக்கு உள்ளது. ஆனால் இங்கு இருப்பதே 21 மாணவர்கள்தான். அவர்களுக்கு 5 ஆசிரியர்கள்!)

பள்ளியின் வேலைநேரம் காலை 8.45 முதல் மாலை 4.40 மணி வரையாகும். ஆனால் ஆசிரியர்கள் உரிய நேரத்துக்கு வருவதில்லை. தினமும் காலை 11 மணிக்குதான் ஆசிரியர்கள் வருவார்கள். இதனால் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடத்தில், ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதை தெரிவித்துள்ளார்கள்.

பெற்றோர்களும் ஆசிரியர்களிடம் சென்று உரிய நேரத்துக்கு பணிக்கு வருமாறு பல முறை கேட்டுக் கொண்டு cள்ளனர். ஆனால் தொடர்ந்து ஆசிரியர்கள் வகுப்புக்கு தாமதமாகவே சென்றுள்ளனர்.

இதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஆசிரியர்கள் வராததைக் கண்டித்து போராட முடிவெடுத்தனர். அதன்படி, பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளிக்கு பூட்டு போட்டு பள்ளி முன்பு அமர்ந்து விட்டனர். மாணவர்கள் இப்படி போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து ஆசிரியர்கள் அனைவரும் பதறியடித்து பள்ளிக்கு வந்தனர்.

பள்ளிக்கு ஏன் லேட் என்று ஆசிரியர்கள் மாணவர்களை கேட்ட காமல் மாறி, மாணவர்கள் ஆசிரியர்களை கேட்கும் நிலை மாறிவிட்டது சோகம்தான்.