சென்னை,

டப்பாடி அரசின் பெரும்பான்மை நிரூபிக்க அ.தி.மு.க எம்எல்ஏ-க்களுக்கு பேரம் பேசப்பட்டது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவுடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்  தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைசந்தித்தார்.

அதிமுக பிளவுபட்டதை தொடர்ந்து, சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி முதல்வராக பதவி ஏற்றார். அப்போது, சட்டசபையில் ஆட்சியினர்  பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் சொகுசு விடுத்திக்கு அழைத்துசெல்லப்பட்டு, அங்கு அவர்களிடம் சசிகலா பேரம் பேசியதாக கூறப்பட்டது.

இதுகுறித்த வீடியோ சமீபத்தில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று சென்னை வந்த கவர்னர் வித்யாசாகர் ராவிடம், எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று பண பேரம் நடைபெற்ற வீடியோ குறித்து மனு கொடுத்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால், அது நடக்கவில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, நாங்கள் குண்டுக்கட்டாக வெளியியேற்றப்பட்டோம். எம்எல்ஏ-க்களுக்கு பேரம் பேசப்பட்டது தொடர்பாக. ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆட்சியே குதிரை பேரத்தில்தான் நடந்து வருகிறது.

வீடியோ விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேச அனுமதி கிடைக்கவில்லை. சபாநாயகரிட மும் வீடியோ ஆதாரத்தை வழங்கினோம். ஆனால், அவர் அதை கண்டு கொள்ளவில்லை. இதுதொடர்பாக ஆளுநரிடம் விரிவான விளக்கம் அளித்துள்ளோம். எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட கோரியுள்ளோம்.

குறிப்பாக, ஆளுநரிடம் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி உள்ளோம். சட்டமன்றத்தில், மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளோம்.  இம்முறை ரகசியமான முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

சட்டப்படி நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம்தான், ஜனநாயகம் காக்கப்படும். அல்லது ஆட்சி க

இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தி.மு.க அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறினார்.