மே17 இயக்கத்தினரை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்: வேல்முருகன் கைது!

Must read

சென்னை,

குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ள  மே17 இயக்கத்தலைவர்  திருமுருகன் காந்தியை விடுவிக்கக்கோரி தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர்  சென்னை சேப்பாக்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வேல்முருகன் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள்  கைது செய்யப்பட்டனர்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர்மாளிகை அருகே,  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியை விடுவிக்கக் கோரி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்பட  10க்கும் மேற்பட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து ஊர்வலமாக சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளதாக வேல்முருகன் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இதனால் முன்கூட்டியே சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். அங்கிருந்து முதல்வர் இல்லம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது வேல்முருகன் உள்ளிட்ட 2000 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதனால் போலீஸ்காரருக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வேல்முருகன் உள்பட 2000-க்கும் மேற்பட்டவர்கள்  கைது செய்யப்பட்டனர்.

More articles

1 COMMENT

Latest article