ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை! கமல்ஹாசன்

Must read

சென்னை: ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என தமிழகஅரசு டாஸ்மாக் கடைகளை இன்றுமுதல் திறக்க உத்தரவிட்டுள்ளது குறித்து கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார்.

”குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். டாஸ்மாக்கை திறப்பதால் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ளவேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை அடுத்து அமல்படுத்தப்பட்ட தளர்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. தற்போது பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி சென்னை உள்பட,  27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  , ”குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ளவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

More articles

Latest article