டில்லி:

ச்ச நீதி மன்ற உத்தரவுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தில் போராட்டம் தொடரும் என்றும், நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம், தங்களது நிலையில் இருந்து எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம்  என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறி உள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 18வது நாளாக அமளி காரணமாக  ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பாராளுமன்ற குழு தலைவர் தம்பித்துரை, காவிரி பிரச்னையை தீர்க்க மத்திய அரசு முன்வராததால், தமிழக மக்களுடன் இணைந்து போராட முடிவு செய்துள்ளோம்.

காவிரிக்காக உச்சநீதிமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் போராட்டம் தொடரும். மக்களுக்கான சேவைகளை செய்வதற்காகவே எங்களை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அதற்காக போராடுவோம் தவிர யாரும் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

 

மேலும், காவிரி விவகாரத்தில் எம்.பி.க்கள்  ராஜினாமா செய்வது தீர்வாகாது என்றும்,  முத்துக்கருப்பன் எம்.பி.யின் ராஜினாமா முடிவு, அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

ராகுலும்,சோனியாவும் ஆதரிப்பதாக உறுதி தந்தால் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்.

மக்களவையில் அதிமுக எம்பிக்கள் 37 பேர் மட்டுமே உள்ளனர். தீர்மானத்திற்கு 50 பேர் ஆதரவு தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.