புதுச்சேரி:

காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசை எதிர்த்து, புதுச்சேரி அரசு சார்பில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது.

இந்த அவதூறு வழக்கை தொடர புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளிக்க மறுத்து முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து, புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

காவிரி விவகாரத்தில்,  6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகம் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை கவனத்தில்கொண்டு, மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழக அரசு சார்பில், மத்திய அரசு மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுபோல, புதுச்சேரி அரசு தரப்பிலும் நீதி மன்ற அவதூறு வழக்கு தொடரப்போவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், புதுச்சேரி அரசின் இந்த முடிவுக்கு, கவர்னர் கிரண்பேடி முட்டுக்கட்டை போட்டுள்ளார்..  மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர  அனுமதி மறுத்துள்ளார்.

ஆளுநரின் இந்த அடாவடியை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநர் கிரண்பேடி  அனுமதி மறுத்திருப்பது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.