சென்னை

னாதிபதி பிரணாப் முகர்ஜி மார்ச் 3ந்தேதி சென்னை வருகிறார். தாம்பரம் விமானப்படை விமான தளத்தில் நடைபெற்று வரும் விழாவில் பங்கேற்கிறார்.

வரும் 3ந்தேதி சென்னை தாம்பரம் விமானப்படை விமான நிலையத்தில் நடைபறும் விமானப்படை விழாவில் பங்குபெற்று விருதுகளை வழங்குகிறார்.

வரும் 2ந்தேதி கேரள மாநிலம் கொச்சி செல்லும் பிரணாப், 3ந்தேதி சென்னை வந்து,   தாம்பரத்தில் நடைபெறும் விமானப்படை விழாவில் அவர் பங்கேற்கிறார்.

தாம்பரம் விமானப்படைப் பயிற்சி தலைமை கமாண்டர் ஏர்மார்‌ஷல் கூறியதாவது,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் 3ந்தேதி சென்னை வருகிறார். அவர்  விமானபடை தளத்தின், 125-வது படை பிரிவு ஹெலிகாப்டர் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார். மேலும் விமானப் படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்கிறார்.

இந்த அணிவகுப்பில்  எம்.ஐ.17 மற்றும் 35 ரக ஹெலிகாப்டர் இடம்பெறும். மேலும் 125-வது படை பிரிவு ஹெலிகாப்டர்கள் வானில் சாகசத்தில் ஈடுபடும் நிகழ்ச்சியையும் கண்டு மகிழ்கிறார்.

இவ் விழாவில் ஜனாதிபதியுடன், தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு தாம்பரம் விமானப்படைப் பயிற்சி தலைமை கமாண்டர் ஏர்மார்‌ஷல் எஸ்.ஆர்.கே. நாயர் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை வரும் ஜனாதிபதியை தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்கிறார்கள்.