பன்றிக்கு பூணூல் போராட்டம் நடந்தே தீரும்!: கோவை.ராமகிருட்டிணன்

Must read

ரும் ஆகஸ்ட் 7 ( ஆவணி அவிட்டம்) அன்று பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் நடத்தப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போராட்டத்துக்கான சுவர் விளம்பரங்கள் சென்னையில் சில இடங்களி்ல் எழுதப்பட, அது குறுத்து காவல்துறைக்கு சிலர் புகார் கொடுக்க அந்த விளம்பரங்கள் காவல்துறையினரால் அழிக்கப்பட்டன. அந்த இடத்தில் “இது காவி பூமி.. ஜெய் இந்துத்துவா” என்ற வாசகங்கள் ஒளிர்கின்றன.

இந்த நிலையில், பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை அறிவித்த தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை. ராமகிருட்டினிடம் பேசினோம்.

நமது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:

“சென்னையில் சுமார் பத்து இடங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதினோம். பல இடங்களில் அழி்துவிட்டார்கள். ஆனாலும் எங்களது போராட்டம் அறிவித்தபடி ஆகஸ்ட் ஏழாம் தேதி நடக்கும்.

“காலம் மாறிவிட்டது. பார்ப்பனர்கள், சாதி பிரச்சினைகளில் ஈடுபடுவதில்லை. இப்போது பூணூல் போராட்டங்கள் தேவையா” என்று சிலர் கேட்கிறார்கள்.

த.பெ.தி.க. போராட்ட அறிவிப்பு – கோவை.ராமகிருட்டிணன்

பார்ப்பன ஆதிக்கம் என்பது ஆயிரம் வருடங்களாக இருக்கிறது. இப்போது இன்னும் வீரியமாக இருக்கிறது. அதே நேரம் வெளியில் தெரியாதபடி இருக்கிறது.

எல்லா பிரச்சினைக்கும் மூல காரணம் பார்ப்பனர்கள்தான், பார்பப்னீயம்தான். மக்கள் தொகையில் அவர்கள் வெறும் மூன்று சதமாக இருப்பதால்ம மீதமுள்ள 97 சதவிகித மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.

விவசாய பிரச்சினையா.. அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். காவிரி விவகாரமா.. அவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இலங்கை கடற்படையால் எந்த பார்ப்பனரும் கொல்லப்படுவதில்லை… ஆக எந்த விதத்தில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை.

அதே நேரம் ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் கோலோச்சுகிறார்கள். ஆகவே தங்களுக்கு சாதகமாக சட்டதிட்டங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். எல்லாமும் அவர்களுக்கு கிடைப்பதுபோல் செய்துகொள்கிறார்கள்.

இன்னும் சிலர், இடைச் சாதியினர்தானே ஆணவக்கொலை செய்கிறார்கள், பார்ப்பனர்கள் அப்பாவிகள்தானே என்கிறார்கள். இடைச்சாதியினர் செய்யும ஆணவக்கொலைகள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதுதான்.. தண்டிக்கப்பட வேண்டியதுதான்.

அதே நேரம் இந்த சாதி வெறியை விதைத்துவிட்டு பார்பப்னர்கள் ஒளிந்துகொள்கிறார்கள். மேலும் 97 சதமுள்ள இதர மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.  இந்த மக்களுக்குள் அடித்துக்கொண்டிருந்தால்தான் அவர்கள் தமது பக்கம் திரும்பமாட்டார்கள் என்று பார்ப்பனர்கள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.

“காவிகளின் கோட்டை”யாக மாறிய சுவர்

ஆகவே பார்ப்பன ஆதிக்கம் இப்போது இல்லை என்பது நமது அறியாமை.

அதே நேரம் பன்றிக்கு பூணூல் அணிவிப்பதால் இந்த பார்ப்பன ஆதிக்கம் அழிந்துவிடுமா என்று  சிலர் கேட்கலாம்.

பார்ப்பன ஆதிக்கம் இன்னமும் நிலவுவதை எளிய மக்களுக்கு புரியம்படியாக சொல்வதற்கான போராட்டமே பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம்.

இன்று பார்ப்பனர்களுக்கு ஆதரவாக, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் எங்களை அருவெறுப்பான வார்த்தைகளில் தரம்தாழ்ந்து விமர்சிக்கிறார்கள். ஆனால் இது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.

தந்தை பெரியார் மீது செருப்பை வீசியது, சாணியை அடித்தது எல்லாம் பார்ப்பனர்கள் அல்லர். அவர்களது தூண்டுதலால் அப்பாவி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் செய்ததுதான்.

ஆகவே இப்போது எங்களை சமூகவலைதளங்ளில் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் சில பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாங்கள் சொல்வது இதுதான்.

சகோதரர்களே உங்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் போராடுகிறோம்.

பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் குறித்த எங்கள் சுவர் விளம்பரங்களை அழித்துவிட்டு அங்கு, “நமோ ஜெய் இந்துத்துவா… இது காவி பூமி” என்று எழுதி வைத்திருப்பதாக அறிகிறோம்.

இது சமுதாயத்தை பிளவுபடுத்தும் சதி. இந்த வாக்கியங்கள் அழிக்கப்பட வேண்டும். அதற்காக சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்போம்” என்று சொல்லி முடித்தார் கோவை. ராமகிருட்டிணன்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article