பஞ்சு, நுால் விலை உயர்வை கண்டித்து 2வது நாளாக போராட்டம் 

Must read

ஈரோடு:
ஞ்சு, நுால் விலை உயர்வை கண்டித்து நடந்து வரும் போராட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து கிளாக் மெர்சண்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகள் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாட்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கனி மார்க்கெட் தினசரி மற்றும் வாரச்சந்தை ஜவுளி வியாபாரிகள் சங்கம், பவர்லூம் கிளாத் மெர்சன்ட்ஸ் அசோஷியேஷன், டெக்ஸ்டைல்ஸ் டிரேடர்ஸ் அசோசியேசன், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம், நூல் வியாபாரிகள் சங்கம், சூரம்பட்டி விசைத்தறி உற்பத்தியாளர் சங்கம், சென்னிமலை விசைத்தறியாளர்கள், பனியன் மார்க்கெட் வியாபாரிகள், தமிழ்நாடு சைசிங் மில் ஓனர்ஸ் அசோஷியேஷன், ஸ்கிரீன் பிரின்ட் அசோசியேசன், கைத்தறி துண்டுகள் தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட 25 சங்கங்கள் கடையடைப்பு போரா ட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்து நேற்று முதல் போரட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து நேற்று தொடங்கிய போராட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.

More articles

Latest article