சென்னை:
சென்னை நந்தனம் அருகே இரவில் ரவுடி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
அடையாறு ருக்மணி நகரை சேர்ந்தவர்  ரவுடி வேலு (38). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று (ஜூன் 25 – ஞாயிறு)  இரவு   நந்தனம் ஒய் எம்சிஏ அருகில் மோட்டார் சைக்கிளில்  இவர் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிகொல்லப்பட்டார்.
download (3)
கடந்த சில நாட்களாக சென்னையி்ல் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன.  இதையடுத்து 150க்கும் மேற்பட்ட ரவுடிகளை பிடித்து சிறையில் அடைத்ததாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்தார். இந்த நிலையில், மேலும் ஒரு கொலை சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.