சென்னை:
மிழக அரசு ஊழியர்களுக்கான மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

முதல்வர் மருத்துவக்காப்பீடுக்கான அட்டை வழங்கியபோது
முதல்வர்  மருத்துவக்காப்பீடுக்கான அட்டை வழங்கியபோது

தமிழகஅரசு செய்தி குறிப்பு:-
தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு 2016 உடன் முடிவடைவதையொட்டி 1.7.2016 முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை சில கூடுதல் பயன்களுடன்  செயல் படுத்திட  முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.
ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த மருத்துவக் காப்பீட்டுத் தொகை 4 ஆண்டுகளுக்கு 4 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  தற்போது இந்த காப்பீடு திட்டம் மேம்படுத்தப்பட்டு  புற்று நோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதியுதவியானது 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியரை முழுவதும் சார்ந்துள்ள, குறைந்தபட்சம் 40 சதவீத குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகள்,  எவ்வித வயது வரம்புமின்றி  இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
விபத்து காரணமாக இத்திட்டத்தின் கீழ் ஒப்புதலளிக்கப்பட்ட சிகிச்சைகளை அவசர சிகிச்சையாக அங்கீகரிக் கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பின், பணியாளர் பயன்பெறவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அரசு துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றின் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவக் காப்பீட்டுப் பலன்களைப் பெற முடியும்.
இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு அரசு பணியாளர்கள் சந்தாத் தொகையாக மாதம் 180- ரூபாய் செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு தனது பங்காக மொத்தம் 17 கோடியே 90 லட்சம் ரூபாயை ஆண்டு தோறும் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும்.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார்  10.22 லட்சம் அரசுப் பணியாளர் மற்றும் அவர்களது அவர்தம் குடும்பத்தினர் பயன் பெறலாம்..
முதல்வர் ஜெயலலிதா   இந்த திட்டத்தை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.   இதன்   அடையாளமாக 5 அரசுப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.