நீட் விலக்கு மசோதாவுக்கு புதிய ஆளுநர் ஒப்புதல் அளிப்பார்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை…

Must read

சென்னை: தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு புதிய ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

நாடு முபவதும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்  நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நீட் தேர்வு பயத்தில் தமிழகத்தில் இதுவரை 14 மாணவர்கள்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கிடையில்,  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தரப்படும் என்று தி.மு.க வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை திமுக அமைத்தது. பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, நீட்விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள அப்பொல்லோ மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட முதுகலை மருத்துவ படிப்பிற்கான சிவிலேஷன் மையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் விலக்கு மசோதாவுக்கு புதிய ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம்.  இந்தியாவில் அனைவருக்கும்  தடுப்பூசி செலுத்திய பிறகே, தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

More articles

Latest article