முதல்வர் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும்: ஸ்டாலின் கிண்டல்

Must read

சென்னை:

திமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசலை தொடர்ந்து, சசிகலாவின் பினாமியான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக நேற்று மாலை பதவி ஏற்றார்.

இதற்கிடையில் கோவையில் இருந்து சென்னை திரும்பிய திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எடப்பாடிக்கு திமுக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஸ்டாலின்,  தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. இனிமேல் நடைபெற இருக்கும் சட்டப்பேரவையில்  முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்று கிண்டலாக கூறினார்.

ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்காமல் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு தகுந்தவாறு பணியாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஏற்கனவே, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் ஸ்டாலினை பார்த்து சிரிக்கிறார் என்று சசிகலா கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

More articles

Latest article