சென்னை: தமிழகத்தில் 46 ஆண்டுகாலம் இல்லாத அளவுக்கு 2021-22ம் ஆண்டு நெற்பரப்பு மற்றும் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது என தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் நெல் உற்பத்தி முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது என மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 46 ஆண்டுகாலம் இல்லாத அளவு, இந்த ஆண்டு நெல் பயிரிடும் பரபரப்பு அதிரிகத்த்துள்ளது என்ற நிலையில், தற்போது நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.
கடந்த 2020-21-ஆம் ஆண்டுகளில் 1.04 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தியான நிலையில், நடப்பாண்டு, 2021-22-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 1.22 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது- இது கடந்த பத்தாண்டுகளில் 1.22 கோடி மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
2014-15ல் 1.2 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. 2021-22-ஆம் ஆண்டில் 22.05 லட்சம் ஹெக்டரில் நெல் பயிரிடப்பட்டது என்றும் தெரிவித்துள்ள அரச, 2000-01ல் 20.08 லட்சம் ஹெக்டரில் நெல் பயிரிடப்பட்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. இதுபோன்று, 2020-21-ஆம் ஆண்டில் 20.36 லட்சம் ஹெக்டர் நெற்பரப்பு இருந்த நிலையில், இந்தாண்டு 22.05 லட்சம் ஹெக்டராக அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது.