மியாமி-யில் நடைபெற்ற கிரிப்டோ கோப்பை செஸ் போட்டியின் 7 வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

நடப்பாண்டில் 3வது முறையாக பிரக்ஞானந்தாவிடம் தோல்வியடைந்தார் கார்ல்சன்.

இந்தப் போட்டியில் 2-2 என்று டிரா ஆன நிலையில் டை ப்ரேக்கரில் கார்ல்சனை வென்றார் பிரக்ஞானந்தா.

இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில் கார்ல்சன் இந்தப் போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

கார்ல்சன் 16 புள்ளிகளும் பிரக்ஞானந்தா 15 புள்ளிகளும் எடுத்தனர் இதனால் பிரக்ஞானந்தாவுக்கு இரண்டாவது இடமே கிடைத்தது.