அதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா?

Must read

நாட்டிலேயே அதிக வருவாய் கொண்ட மாநில கட்சிகளின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதிக நன்கொடை கொடுத்தவர் யார் என்பது தெரியுமா?

மேலே படியுங்கள்.

2004-05ஆம் நிதியாண்டு முதல் 2014-15ஆம் நிதியாண்டு வரை அரசியல் கட்சிகளின் வருமானம் குறித்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (Association for Democratic Reforms – ADR) கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.

தற்போது 2015-16ஆம் ஆண்டில் கட்சிகளின் வருமானத்தை இந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இதில் கட்சிகள் பெற்ற நன்கொடை, கட்சிகளின் சொத்து விற்பனை, உறுப்பினர் கட்டணம், வங்கிகளில் டெபாசிட் செய்த தொகைகளிலிருந்து வரும் வட்டி உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளில் கிடைத்த தொகையும் அடங்கும்

இதன்படி நாட்டிலேயே அதிக வருவாய் உள்ள மாநில கட்சி தி.மு.க.தான். – ரூ77.63 கோடி வருவாய்!

இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பது அ.தி.மு.க. இதன் கடந்த ஆண்டு வருவாய் ரூ.54.938 கோடி!

சைதை துரைசாமி

இதெல்லாம் சமீபத்தில் வெளியான செய்தி. ஆனால் இதில் கவனிக்கப்படாமல் விடுபட்ட செய்தி ஒன்று உண்டு.

கட்சி, சாதி, மதம் பாராமல் ஏழை மக்களுக்கு உதவும்படியாக அதிக நிதி அளித்தவர் யார்   ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. (கட்சிக்கு அல்ல.)

அப்படி ஏழை மாணவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புக்கு அதிக நிதி அளித்தவர் மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனரும் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி. மாநிலத்திலேயே அதிக நிதி அளித்தவர் இவர். கல்விக்கு மட்டுமின்றி ஏழை மக்களின் மருத்துவ சிகிச்சைக்கும் உதவியிருக்கிறார்.

தவிர பின்தங்கிய மாணவர்களுக்காக இவர் நடத்தும் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்துக்காக இவர் செலவிடும் தொகை இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

More articles

10 COMMENTS

Latest article