1999 ஆம் ஆண்டு வக்காவ்ஸ்கி சகோதரிகள் இயக்கத்தில் வெளியான படம் ‘தி மேட்ரிக்ஸ்’.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு ‘தி மேட்ரிக்ஸ் ரீலோடட்’ என்ற படமும், அதே ஆண்டின் இறுதியில் ‘தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ்’ என்ற படமும் வெளியாகி வெற்றியைக் குவித்தன.

ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தி மேட்ரிக்ஸ்’ படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால் பல ஹாலிவுட் படங்களின் படப்படிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ‘தி மேட்ரிக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து படக்குழுவினர் எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில் ‘மேட்ரிக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.