சென்னை பல்லாவரத்தில் நித்தியானந்தா ஆசிரமம் ஆக்கிரமித்திருந்த அரசு புறம்போக்கு நிலம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று மீட்கப்பட்டது.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் கொட்டகை அமைத்து கடந்த சில ஆண்டுகளாக நித்தியானந்தா ஆசிரமம் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆட்சியரின் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்புடன் வந்த வருவாய் துறையினர் இங்கு அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை அகற்றி அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

நாட்டை விட்டு வெளியேறிய குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நித்யானந்தா கடந்த பல ஆண்டுகளாக எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் உள்ளது.

கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாகவும் அதை அமெரிக்காவின் நெவார்க் நகர நிர்வாகம் அங்கீகரித்துள்ளதாகவும் கூறியுள்ள நித்யானந்தா தனது கைலாசா நாட்டின் சார்பில் ஐ.நா. சபையிலும் ஆட்களை அனுப்பி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சென்னையின் முக்கிய இடத்தில் நித்யானந்தா ஆசிரமம் பெயரில் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.