சென்னை,

நேற்று சென்னை மெரினாவில் நடைபெற்ற தடியடி குறித்த தகவல் களை சேரித்த செய்தியாளர்களையும் போலீசார் தாக்கினர்.

சென்னை மெரினாவில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு  போராட்டக்கா ரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக நேற்று காலை முதலே அப்புறப்ப டுத்தினர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது.

அதைத்தொடர்ந்து சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள காவல்துறை வாகனம் மற்றும் காவல்துறை அலுவலகத்துக்கு அடையாளம் தெரியாத சில விஷமிகள்  தீ வைத்து எரித்தனர். இதனால் மேலும் பதற்றமானது.

இதனை புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் செய்தியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர்.

கலவரத்தில் ஈடுபட்டவர் களை புகைப்படம், வீடியோ எடுக்க விடாமல் போலீசார் தடுத்தனர். மேலும், அப்பகுதியில் இருந்து செய்தியாளர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.

ஊடக நிறுவனத்தின் அடையாள அட்டையை காண்பித்த பின்னரும் கண்மூடித்தனமாக போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர் சுரேந்திரன் என்பவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டது.

ரத்தம் சொட்டும் நிலையில், அவர் தனது அடையாள அட்டையை காண்பித்துள்ளார். என்றாலும், போலீசார் அதனை ஏற்காமல் தாக்குதல் நடத்தினர்.

இதேபோல் தினகரன் பத்திரிகையை சேர்ந்த போட்டோகிராபர் அருண் என்பவரையும், தீக்கதிர் கேமரா மேன் லட்சமி காந்த் பாரதி என்பவரையும் கண்மூடித்தனமாக போலீசார் தாக்குதல் நடத்தினர்.

நம் சகோதரர்களைப் பாதுகாப்போம்! பாதிப்பு:(நேரிலும் பேசியிலும் உறுதிப்படுத்தப்பட்டது)
1. சுரேந்தர்- பாலிமர் தொ.கா.-மண்டை காயம்- சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

2.அருண்-தினகரன் – காயம், படப்பதிவியும் நாசம்- சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

3. பிரபாகரன் – நியூசு 7- சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்

4. இலட்சுமிகாந்த் பாரதி-தீக்கதிர்- காயம், படப்பதிவியும் நாசம்

5. பழனி, மணிக்குமார் – பாலிமர் – காயம்

6. செயக்குமார்- பிபிசி தமிழ்- படப்பதிவி சேதாரம்

போலீசாரின் இந்த தாக்குதலுக்கு தமிழக ஊடக சங்கங்களும்,  ஊடக நிறுவனங்களும் வன்மையாக கண்டித்துள்ளன.