இலங்கை அகதி முகாம் மீது இந்து முன்னணி அமைப்பினர் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை:

லங்கை அகதிகள் முகாம் மீது இந்து முன்னணி அமைப்பின் குண்டர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவையில் பூளுவப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கடந்த சனிக்கிழமை இரவு கைப்பந்து போட்டி நடந்தது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

ஒரு தரப்பினருக்கு ஆதரவாக இந்து முன்னணியினர் முகாமிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நடந்த வாக்குவாதத்தின் போது ஒரு தரப்பினர் இந்து முன்னணி நிர்வாகி ரமேஷை தாக்கிவிட்டனர்.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த இந்து முன்னணி அமைப்பினர் சனிக்கிழமை நள்ளிரவில் முகாம் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்தனர்.

இதையடுத்து வெளியேறிய இந்து முன்னணி அமைப்பினர் மீண்டும் அகதிகள் முகாம் சென்று பெட்ரோல் குண்டுகளையும் கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஏற்கனவே கடந்த ஜுன் மாதம் 17ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தின் மீது இந்துத்துவ அமைப்பினர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.


English Summary
The Hindu Organization volunteers Petrol bombing on Sri Lanka refugee camp