ஆதாரமில்லாமல் பேசக்கூடாது! அமைச்சருக்கு ஐகோர்ட்டு சூடு!

சென்னை,

னியார் பாலில் கலப்படம் உள்ளதாகவும், இதன் காரணமாக பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறக்கூடாது அமைச்சருக்கு ஐகோர்ட்டு சூடு வைத்துள்ளது.

அமைச்சரின் குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மறுத்தன. தனியார் நிறுவனங்களிடம் எதையோ எதிர்பார்த்து அமைச்சர் பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், பால் கலப்பட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  பால் கலப்படம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்களின் பால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் எந்தவொரு பாலிலும் ரசாயணம் கலக்கப்படவில்லை என்று ஆய்வு முடிவு கூறியது.

இதற்கிடையில்  3 தனியார் பால் நிறுவனங்கள், அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரைணைக்கு வந்தது. அப்போது,  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதாரம் இல்லாமல் பால் குறித்து   பேச தடை விதித்துள்ளது.

மேலும் இதுகுறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க அமைச்சருக்கு  சென்னை  உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

 


English Summary
Do not speak without proof! Highcourt condemned to The minister Rajendra Balaji