a
சென்னை : இன்று தமிழக சட்டசபையில் கவர்னர் ரோசய்யா ஆற்றிய உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
* அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் செயல்படும்
* விவசாய கடன் தள்ளுபடி, 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் , டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு, 500 கடைகள் மூட உத்தரவு பாரட்டுக்குரியது.
*விரைவில் லோக் அயுக்தா அமைக்கப்படும்.
* 13 ஆயிரம் மெகாவாட் அனல் மின் உற்பத்தி இலக்கு
* கிராமப்புற கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
* நிதி கமிஷன் மூலம் கிராமங்கள் மேம்பாடு
* பொது சுகாதாரம் மேம்படுத்தப்படும்
* கழிவு பொருள் அழிப்பு மேலாண்மை திட்டம்
* ஜல்லிக்கட்டு தடையை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* நகரங்களில் கார்பன் மாசு இல்லாமல் ஆக்க திட்டம்
* சாலை மேம்பாடு, புற வழிச்சாலைகள், பாலங்கள் அமைக்கப்படும்
* சுய உதவிக்குழுக்கள் மூலம்
* கிராமங்கள் தோறும் கழிப்பிடம் கட்ட திட்டம்
* திறந்தவழி கழிப்பிடம் இல்லாமல் ஆக்குவது
*மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தப்படும்
* அம்மா அழைப்பு மையம் மேலும் வலுபடுத்தப்படும்
* நகர்ப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
* உணவு – தானிய உற்றபத்தியில் தன்னிறைவு பெறும்
* பால் வளத்துறை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்
* 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்திறன் அலகு அமைக்கப்படும்.
* வறுமை ஒழிக்க மாவட்டம்தோறும் திட்டம்
*முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 152 ஆக உயர்த்தப்படும்
* சென்னையில் மெட்ரோ ரயில் 2 வது கட்ட பணி துவக்கப்படும் .
* அரசு சேவைகளை மக்கள் எளிதில் பெற வழி வகை
* கறவை பசு, ஆடுகள், இலவச வேட்டி சேலை திட்டம் தொடரும்.
* மீனவர்கள் நலன், இலங்கை தமிழர் நலனில் முழு அக்கறை
* தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ தொடர் நவீன முயற்சிகள்
* தமிழக நலன் காத்திட கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்
* மருத்துவம்- சுகாதாரம் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
* மீனவர்கள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்
* மருத்துவ கல்வி பொது நுழைவுத்தேர்வு அனுமதிக்கப்படாது.
* சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ் கொண்டு வர நடவடிக்கை
* 4 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க ஒப்பந்தங்கள்
* காவிரி பிரச்னையில் முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.
* 2 ஆண்டுகளுக்கொரு முறை உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும்
பொன்னேரியை தொழில் முனையமாக்கிட நடவடிக்கை
இவற்றோடு மேலும் பல்வேறு  அம்சங்கள் கவர்னர் உரையில்  இடம் பெற்றுள்ளன.