சென்னை:
ருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, சக்கர நாற்காலியுடன் அமர சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டும் அவர் சட்டசபைக்கு வரவில்லை.
சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலை அடுத்து, கடந்த மே 25–ம் தேதி சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியிலேயே சட்டசபைக்கு  வந்து, முன் வரிசையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்தார்.
201606152310010208_Karunanidhi-in-Tamil-Nadu-Legislative-Assembly-for-the_SECVPF
“அதே இடத்தை கருணாநிதிக்கு ஒதுக்கித்தரவேண்டும். அப்படி தந்தால் சட்டமன்றத்துக்கு தொடர்ந்து கருணாநிதி வருவார்” என்று சபாநாயகர் தனபாலிடம் தி.மு.க. தரப்பு கோரிக்கை வைத்தது.
பிறகு சட்டமன்ற அதிகாரிகள் வட்டாரம், “‘எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்குப் பின்பு உள்ள இரண்டாம் வரிசையின் முதல் சீட்  கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலியில் அமர்ந்து, அவை நடவடிக்கையில் கலந்துகொள்ளும் அளவுக்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது’’ என்றனர்.
ஆனால் இன்றைக்கு சட்டமன்றத்துக்கு கருணாநிதி வரவில்லை.
சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அவை நடவடிக்கைகளில் பங்கேற்க இருக்கை வசதி செய்து தந்தால், சட்டசபைக்கு கருணாநதி வருவார் என திமுக தரப்பில் 2012ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.