சென்னை: தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின் இலக்கு  என ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளும் விறுவிறுப்பாகவும்,ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டு வருகின்றன.அனைத்து துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் முதல்வரின் ஆணையையேற்று துரிதகதியில் செயலாற்றி வருகின்றனர். மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையவ் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியை உறுதிசெய்யும் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல, கொரோனா தொற்றால் வேலையிழந்துள்ள லட்சக்கணக்கானவர்களின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்ட புதிய திட்டங்களையும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தி வருகிறார்.

சென்னை கிண்டியில்  நடைபெற்ற தொழில்துறை கண்காட்சியை பார்வையிட்= தலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர் ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ எனும் தொழில்துறை நிகழ்வில் பங்கேற்றார். இந்த நிகழ்வில், ரூ.28,664 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. அதன்படி, ஒப்பந்தம் போடப்ட்டுள்ள  ’49 திட்டங்கள் மூலம் ரூ.28,508 கோடி முதலீட்டில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிட வகை செய்யப்பட்டுள்ளது; தொழில் புரிவதை எளிதாக்கிட ஒற்றை சாளர இணையதளம் 2.0 தொடங்கப்பட்டது.

‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ நிகழ்வில், ரூ.28,664 கோடி மதிப்பிலான 47 புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. இந்தத் திட்டங்கள் மூலம் வாகன உற்பத்தி, காற்றாலை மின்சாரம், எரிசக்தி, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் 82,400 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கர்னி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள், முதலீட்டாளர்கள், தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, , 14 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் 5 நிறுவனங்களுக்கு மானியம் வழங்கினார்.

இந்தவிழாவில் பேசிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பண்பாட்டின் முகவரியாகத் திகழும் தமிழ்நாடு, தற்போது முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாறி வருகிறது. கொரோனா காலத்தை, கொரோனாவை வென்ற காலமாக மாற்றியுள்ளோம். தொழிலை வர்த்தகமாக கருதாமல் சேவையாக எண்ணி தொழில் முதலீட்டாளர்கள் செயல்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். தெற்காசியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின் இலக்கு.” எனத் தெரிவித்துள்ளார்.