சென்னை,

ரோலில் வந்துள்ள சசிகலாவுக்கு  கர்நாடக சிறைத்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளது. இந்நிலையில்,  சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட பரோல் நிபந்தனைகளுக்கு தமிழக அரசு தான் காணணம் என டிடிவி ஆதரவு தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டி உள்ளார்.

மேலும், தமிழகத்தில் டெங்கு ஆட்சி நடக்கிறது என ஸ்டாலின் கூறியது சரிதான் என்றும் கூறினார்.

இன்று காலை டிடிவி தினகரனின்  சென்னை அடையாறு வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வனி,  இரட்டை இலை சின்னத்தை முடக்கிய பன்னீர்செல்வம் அணியினரை இணைத்துக்கொண்டு செயல்படும் பழனிசாமி தலைமையிலான அரசு மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? என கேள்வி எழுப்பினார்.

மேலும்,  சசிகலாவை சந்திக்க அமைச்சர்கள் தயாராகவே இருக்கிறார்கள். 18 அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சந்தித்து பேச தயாராக இருக்கிறார்கள். ஆனால் சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பழனிசாமி அரசு பயப்படுகிறது என்று கூறினார்.

அதனால்தான் சசிகலா பரோலின்போது, யாரிடமும் பேசக்கூடாது என்பது போன்ற கடும் நிபந்ததனைகளை தமிழக அரசு கர்நாடக சிறைத்துறைக்கு பரிந்துரைத்துள்ளது என்று கூறினார்.

எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும்வரை மட்டுமே இந்த ஆட்சி நீடிக்கும், என்றும், அதன்பிறகு  சட்டமன்றத்துக்குள் வந்தபிறகு தாங்கள் யார் என்பதை காட்டுவதாகவும் தெரிவித்தார்.

டெங்கு பாதிப்பு குறித்த கேள்விக்கு,  எதிர்க்கட்சி தலைவர் கூறியபடி தமிழகத்தில் டெங்கு ஆட்சி தான் நடைபெற்று வருகிறது என்றும், அமைச்சர் ஜெயக்குமார்  என்ன பேசுகிறார் என்பது தெரியா மலே பேசிக்கொண்டிருக்கிறார் என்றும்,  சசிகலாவின் காலில் விழுந்து கட்சியின் பொதுச்செய லாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்திய ஜெயக்குமார், இன்று அவரை கெட்டவர் என விமர்சனம் செய்துவருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.