சென்னை,

ன்றுமுதல் மேற்படிப்புகக்ன  மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது. இதை  ரத்து செய்யக்கோரி, அரசு மருத்துவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

அரசு மருத்துவர்கள் மேற்படிப்புக்கான 50 சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து கடந்த 17 நாட்கள் மருத்துவர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் போராட்டம்  காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து, ஐகோர்ட்டு போராடுபவர்கள்மீது எஸ்மா சட்டத்தை பயன்படுத்த அரசுக்கு ஆலோசனை கூறியது.

இதையடுத்து அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து  மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு தேதி உடனே அறிவிக்கப்பட்டு இன்று முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இன்று தொடங்கியது. முதல்நாளான இன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நண்பகல் 12 மணியளவில் தொடங்கியது.

ஏற்கெனவே அழைக்கப்பட்டிருந்த 11 மாணவ, மாணவிகள் ஓமாந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்கு வந்திருந்தனர்.

இந்நிலையில், மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி, அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் எனவும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.

அதைத்தொடர்ந்து,  அனுமதியின்றி திடீரென போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதன் காரணமாக கலந்தாய்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.