கருணாநிதி 60ஆண்டு வைரவிழா: ஸ்டாலினை சந்தித்தார் நக்மா!

Must read

சென்னை,

சென்னை வந்துள்ள அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை திடீரென சந்தித்து பேசினார்.

இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வந்த நக்மா, தங்கு  திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை அவர் சந்தித்துப் பேசினார். இருவரின் சந்திப்பு பரபரப்பாக பேசப்பட்டது.

இதுகுறித்து நக்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஸ்டாலின் திமுகவின்  செயல் தலைவராக  பதவி ஏற்றபிறகு முதன்முறையாக சந்தித்ததால் அவருக்கு வாழ்த்து கூறியதாகத் தெரிவித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்றார்.

மேலும் தற்போதைய தமிழக அரசு மக்களுக்கு எந்த நன்மையையும் செய்வதில்லை என்று குற்றம்சாட்டினார்.

நேற்று நடிகர் ரஜினியை சந்தித்தற்கும், தற்போதைய ஸ்டாலின் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,  இருவரையும் சந்தித்தது இடையே எந்த விதமான தொடர்பும் இல்லை என்றார்.

மேலும் அடுத்த மாதம் நடைபெற இருக்கும்  திமுக தலைவர், கருணாநிதி வைரவிழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா அல்லது ராகுல் காந்தி கண்டிப்பாக பங்குபெறுவார்கள் என்றும் கூறினார்.

More articles

Latest article