சேலம்:

ரே பெண்ணை 3 இளைஞர்களுக்கு வெவ்வேறு நாட்களில் காட்டி கமிஷன் பெற்று மோசடி செய்த திருமண புரோக்கருக்கு தர்மஅடி விழுந்தது.

சேலம் மாவட்டம் ஆத்துர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் திருமணத் திற்கு பெண் தேடி வந்துள்ளார். இதுகுறித்து திருமண புரோக்களிடமும் தெரிவித்துள்ளார்.

ஏமாற்றிய இளம்பெண் உடன் புரோக்கர் கண்ணன்

இதையறிந்த புரோக்கர் கண்ணன் என்பவர், கேரளாவில் தனக்கு தெரிந்த பெண் இருப்பதாக கூறி, அவரது போட்டோவை காண்பித்து ஓகே செய்துள்ளார். அதைத்தொடர்ந்து திருமண நிச்ச தார்த்தமும் நடைபெற்றது. சக்திவேல் அந்த பெண்ணுக்கு  நிச்சயதார்த்த மோதிரம் போட்டுள் ளார். இதையடுத்து  புரோக்கர் கமிஷனராக ரூ.25ஆயிரம் கமிஷனும் பெற்றுள்ளார் கண்ணன். அதன்பிறகு புரோக்கர் கண்ணன் சக்திவேலை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார்.

புரோக்கர் கண்ணன் இதுபோல சேலம் பகுதியில் மேலும் 2 இளைஞர்களுக்கு அதே கேரள  பெண்ணை காட்டி நிச்சயதார்ததம் செய்து பண மோசடி செய்துள்ளார்.

இந்த நிலையில், திருமண தேதி குறித்து முடிவு செய்ய பாதிக்கப்பட்டவர்கள் அந்த பெண் கொடுத்த அட்ரசில் தேடியபோது அப்படியொரு அட்ரசே இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், புரோக்கர் கண்ணனை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், புரோக்கர் கண்ணன் அதே கேரள பெண்ணுடன் மற்றொரு வாலிபரை ஏமாற்றும் நோக்கில் கள்ளக்குறிச்சி பகுதிக்கு காரில் அழைத்துச்சென்றுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் காரை மடக்கி அவர்கள் இருவரையும் நைய புடைத்தனர். பின்னர், இருவர்களும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எத்தனை பேர் இதுபோல ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கூறிய காவல்துறையினர், இதுபோன்ற போலி புரோக்கர்களை நம்பி ஏமாறாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

3 பேரிடம் ஒரே பெண்ணை காட்டி ஏமாற்றிய புரோக்கர் கண்ணன் ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.