இன்று மதியம் இந்தியாவில் தரையிறங்குகின்றன 5 ரஃபேல் போர் விமானங்கள்….

Must read

டெல்லி:
பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ள 5 ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியாவில் தரையிறங்குகின்றன.  இன்று மதியம் அம்பாலா விமான நிலையத்திற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா பிரானஸ் இடையே  36  ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்கள், மற்றும் உச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து,  ஒப்பந்தம் முழுமை பெற்றது. அதையடுத், 36 ரஃபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் வாங்குவது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பிரான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன 5 ரஃபேல் போர் விமானங்கள் முதல் கட்டமாக இந்தியா வருகிறது.  பிரானசில் இருந்து  நேற்றுமுன்தினம் (ஜூலை 27) இந்தியாவுக்கு புறப்பட்டன. வரும் வழியில் நடுவானிலேயே பெட்ரோல் நிரப்பப்பட்டது.
இந்த 5 விமானங்கள்  நேற்றுமுன்தினம் இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் ஓய்வுக்காக  தரையிறக்கப்பட்டன. இதையடுத்து  மீண்டும் பயணத்தை தொடங்கிய ரஃபேல்  போர் விமானங்கள்  இந்தியா நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.
 இன்று மதியம் இந்தியாவின் அரியானா மாநிலம் அம்பாலா விமானத்தளதில் தரையிறங்குகிறது.

More articles

Latest article